உள்ளூர் செய்திகள்

மத்திய அரசை கண்டித்து ராமேசுவரத்தில் திமுக ஆர்ப்பாட்டம்

Published On 2024-02-11 05:20 GMT   |   Update On 2024-02-11 05:20 GMT
  • கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இலங்கை கடற்படையினரால் 3,076 தமிழ்நாடு மீனவர்கள் கைது செயப்பட்டு உள்ளனர்.
  • ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

ராமேசுவரம்:

தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது அவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி சிறைபிடித்து செல்வது தொடர்ந்து நடந்து வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இலங்கை கடற்படையினரால் 3,076 தமிழ்நாடு மீனவர்கள் கைது செயப்பட்டு உள்ளனர். 534 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காணக்கோரியும், மீனவர்களை பாதுகாக்க தவறிய மத்திய அரசை கண்டித்து ராமேசுவரத்தில் தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி ராமேசுவரம் பஸ் நிலையத்தில் முன்பு இன்று காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தலைமை தாங்கி பேசினார். மாநில மீனவரணி செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஒருங்கிணைப்பில் ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகை, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கனக்கான மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்றவர்கள் மத்திய அரசை கண்டித்தும், மீனவர்களை வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்து ராமலிங்கம் எம்.எல்.ஏ., செ.முருகேசன் எம்.எல்.ஏ. மற்றும் 6 மாவட்டங்களை சார்ந்த மீனவர் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மீனவ மகளிர் அமைப்புகளை சேர்ந்தவர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News