உள்ளூர் செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தல் பணநாயக முறையில் நடந்தது- ஜி.கே. வாசன் குற்றச்சாட்டு

Published On 2023-03-02 05:50 GMT   |   Update On 2023-03-02 05:50 GMT
  • அதிராம்பட்டினம் வாலிபர் ஆஸ்திரேலியாவில் சுட்டு படுகொலை செய்யப்பட்டது வருத்தம் அளிக்கிறது.
  • திரிபுரா உள்ளிட்ட மாநில தேர்தல் முடிவுகள் பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது.

கும்பகோணம்:

கும்பகோணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வருகை தந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கிறது. ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெறவில்லை. பணநாயகம் முறையில் தான் தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவு வரும் வரை பார்த்தால் தான் தெரியும்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் உடனடியாக மீனவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கியாஸ் விலை உயர்வு பொருளாதார ரீதியில் மக்களை பாதிக்கும். இதுபோல் தி.மு.க அரசும் தேர்தலில் கியாஸ்க்கு மானியம் வழங்கப்படும் என அறிவித்ததை செயல்படுத்த வேண்டும். கியாஸ் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

அதிராம்பட்டினம் வாலிபர் ஆஸ்திரேலியாவில் சுட்டு படுகொலை செய்யப்பட்டது வருத்தம் அளிக்கிறது. உடல் பாதுகாப்பாக தாயகம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது திரிபுரா உள்ளிட்ட மாநில தேர்தல் முடிவுகள் பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News