திருமணமான 2 மாதத்தில் கணவனை விட்டு காதலனுடன் ஓட்டம் பிடித்த புதுப்பெண்
- போலீசார் தங்களை தேடி வருவதை அறிந்த ராஜலட்சுமி தனது காதலனுடன் வடமதுரை போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தார்.
- போலீசாருக்கு ராஜலட்சுமியுடன் வந்திருப்பது காதலனா அல்லது கணவனா என்ற குழப்பம் ஏற்பட்டது.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகில் உள்ள காக்காயன்பட்டியை சேர்ந்த செல்லம்மாள் மகள் ராஜலட்சுமி(18). பிளஸ்-2 வரை படித்துள்ள இவருக்கும், புத்தூர் கிராமத்தை சேர்ந்த செல்லபாண்டி(20) என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 18 வயது நிரம்ப ஒரு சில வாரங்கள் பாக்கி இருந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து இருவீட்டாருக்கும் தெரிவித்தனர்.
இதனைதொடர்ந்து திருமணம் முடிந்ததும் இருவரையும் தனித்தனியாக பிரித்து வைத்தனர். பின்னர் 18 வயது பூர்த்தி அடைந்ததும் மீண்டும் கணவர் வீட்டிற்கு ராஜலட்சுமி அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் கடந்த 8-ந்தேதி வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து செல்லம்மாள் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் ராஜலட்சுமி ஏற்கனவே பூசாரிபட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி(21) என்பவரை காதலித்து வந்ததும், அவருடன் மாயமானதும் தெரியவந்தது.
போலீசார் தங்களை தேடி வருவதை அறிந்த ராஜலட்சுமி தனது காதலனுடன் வடமதுரை போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தார். போலீசாருக்கு ராஜலட்சுமியுடன் வந்திருப்பது காதலனா அல்லது கணவனா என்ற குழப்பம் ஏற்பட்டது. அதற்கு ராஜலட்சுமி தான் முத்துப்பாண்டியை காதலித்ததாகவும், இவருடன்தான் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் தெரிவித்தார்.
இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் ஏற்கனவே திருமணமாகி விட்டதால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. இவருடன்தான் வாழவேண்டும் என்றால் முறைப்படி முதல் திருமணம் செய்தவரை விவகாரத்து செய்துவிட்டு முத்துப்பாண்டியுடன் சேர்ந்து வாழலாம் என தெரிவித்தனர். மேலும் பெற்றோரிடமும் எடுத்துக்கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.