உள்ளூர் செய்திகள்

தேர்தல் நடத்தை விதி மீறியதாக தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.- நடிகர் சிங்கமுத்து மீது வழக்கு

Published On 2024-04-02 09:55 GMT   |   Update On 2024-04-02 09:55 GMT
  • காரில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பசிலியான் நசரேத்திற்கு ஆதரவாக 5000 நோட்டீஸ்கள் இருந்தது தெரியவந்தது.
  • பறக்கும் படை அதிகாரி சுனில் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார்.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஆரல்வாய்மொழி காந்திநகர் பகுதியில் எந்த ஒரு அனுமதியும் இன்றி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நேரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக அ.தி.மு.க.வினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகர் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., நடிகர் சிங்கமுத்து உள்பட 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குளச்சல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணவாளக்குறிச்சி பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பசிலியான் நசரேத்திற்கு ஆதரவாக 5000 நோட்டீஸ்கள் இருந்தது தெரியவந்தது. அந்த நோட்டீசுகளை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து பறக்கும் படை அதிகாரி சுனில் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவரும், அ.தி.மு.க. மாவட்ட இணை செயலாளருமான சாந்தினி பகவதியப்பன் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News