முதல்-அமைச்சரை நம்பி இருக்கிறோம்: மாணவியின் தாயார் பேட்டி
- 2 உடற்கூராய்விலும் ஒரு சில விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளது. சில விசயங்கள் மறைக்கப்பட்டுள்ளது
- பள்ளி நிர்வாகம் சார்பில் இதுவரை சி.சி.டி.வி. காட்சி பதிவை தரவில்லை. தப்பு இருப்பதால் தான் தரவில்லை.
சென்னை:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி நிருபர்களிடம் கூறியதாவது:-
எனது மகளின் சாவுக்கு காரணமானவர்கள் தப்பிவிடக்கூடாது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். விசாரணையை விரைவாக முடிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம்.
குற்றவாளிகள் யாரையும் தப்பவிட மாட்டோம் என்று அவர் உறுதியளித்துள்ளார். அவரை முழுமையாக நம்புகிறோம்.
2 உடற்கூராய்விலும் ஒரு சில விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளது. சில விசயங்கள் மறைக்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகம் சார்பில் இதுவரை சி.சி.டி.வி. காட்சி பதிவை தரவில்லை. தப்பு இருப்பதால் தான் தரவில்லை.
கைது செய்யப்பட்ட 5 பேரும் ஜாமீனில் தான் இருக்கிறார்கள். அவர்களை ஜாமீனில் விட்டது தவறு என்று அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். அவர்களை குற்றவாளிகள் என்பதை நிரூபித்தே தீருவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.