உள்ளூர் செய்திகள்

தஞ்சை பூக்காரத்தெரு சுப்பிரமணியசாமி கோவில் கும்பாபிஷேகம்; நாளை நடக்கிறது

Published On 2023-09-02 10:15 GMT   |   Update On 2023-09-02 10:15 GMT
  • நேற்று 2 மற்றும் 3-ம் கால யாகசால பூஜைகள் நடைபெற்றன.
  • நாளை பகல் 11.45 மணிக்கு மகா அபிஷேகம் செய்யப்படுகிறது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் பூக்கார தெருவில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தன.

பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுகிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு கடந்த 29-ந் தேதி விக்னேஷ்வர பூஜை நடைபெற்றது. 30-ந் தேதி கணபதி ஹோமம் நடந்தன.

31-ந் தேதி சிவகங்கை பூங்காவில் இருந்து யானை மீது புனிதநீர் ஊர்வலம் எடுத்து வரப்பட்டது.

அன்றைய தினம் மாலை முதல் கால யாக பூஜைகள் தொடங்கின.

நேற்று இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.

இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து விஷேச ஹோமம், திரவியங்கள் ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இன்று மாலை ஐந்தாவது கால யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது.

நாளை (ஞாயிற்றுகிழமை) காலை 6 மணிக்கு 6-வது கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது.

பின்னர் பூர்ணாஹூதி தீபாராதனை காண்பிக்கப்படும். தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் 9.15 மணிக்குள் சாவடி காமாட்சி அம்மன், விநாயகர் கும்பாபிஷேகம் நடக்கிறது.

இதையடுத்து கடம் புறப்பாடு நடைபெற உள்ளது.

காலை 10 மணிக்கு சுப்பிரமணியர் மற்றும் அனைத்து விமான கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

தொடர்ந்து மூலஸ்தானம், பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. பகல் 11.45 மணிக்கு மகா அபிஷேகம் செய்யப்படுகிறது. இரவு 7 மணிக்கு மயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறும். இந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

Tags:    

Similar News