உள்ளூர் செய்திகள்

சிவாடி அரசு பள்ளியில் மாணவியை கடுமையாக தாக்கிய ஆசிரியர்

Published On 2023-09-22 10:16 GMT   |   Update On 2023-09-22 10:16 GMT
  • 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
  • மாணவி தலையில் காயம் இருப்பதை கண்டு அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

தொப்பூர்,

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த சிவாடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் இக்கிராமத்தை சுற்றியுள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இதே பள்ளியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கடுமையாக திட்டி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவியை நேற்று பள்ளியில் இருக்கும் போது தடியால் அடித்ததின் காரணமாக தலையில் அடிப்பட்டு வீங்கி உள்ளது. இதனையடுத்து பள்ளி முடிந்த பிறகு மாணவி வீட்டுக்கு சென்று சோர்வாக இருந்துள்ளார்.

மாணவியை பார்த்த தாய் ஏன் அமைதியாக இருக்கின்றாய் என கேட்டதற்கு மாணவி அழுது கொண்டே ஆசிரியர் தலை மீது அடித்துவிட்டார் என கூறியுள்ளார்.

மாணவியின் தலை வீங்கி இருப்பதை கண்டு அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

அதன்பிறகு இது குறித்து ஆசிரியரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது , மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் தேவையான பணத்தை கொடுக்கிறேன் என அலட்சியமாக பதில் அளித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மாவட்ட கல்வித்துறை அதிகாரி களிடம் புகார் மனு கொடுத்துள்ளனர்.

மேலும் அதில் மாணவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பல வருடங்களாக ஒரே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களை பணி மாறுதல் செய்ய வேண்டும், என அதில் தெரிவித்துள்ளனர்.  

Tags:    

Similar News