உள்ளூர் செய்திகள்

தரை சூடாக இருக்கிறது 'பெட்' எடுத்து வாருங்கள்- நடுரோட்டில் படுத்து 'போதை வாலிபர்' ரகளை

Published On 2023-07-16 09:35 GMT   |   Update On 2023-07-16 09:35 GMT
  • ஹாரன் ஒலித்தும் எந்த அசைவும் இல்லாமல் போதையில் படுத்து கிடந்தார்.
  • அங்கிருந்து செல்ல மறுத்து அடம் பிடித்த போதை வாலிபர் போலீசார் கால்களை பிடித்து போதை மயக்கத்தில் உளறினார்.

திருவள்ளூர்:

திருத்தணி பஸ் நிலையம் அருகில் உள்ள அரக்கோணம் சாலை எப்போதும் வாகன போக்குவரத்தால் பரபரப்பாக காணப்படும்.

காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் மதுபோதை தலைக்கேறிய நிலையில் தட்டுத்தடுமாறி வாலிபர் ஒருவர் அரக்கோணம் சாலையில் நடந்து வந்தார். திடீரென அவர் நடுரோட்டிலேயே படுத்து தூங்க தொடங்கினார்.

இதனால் அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஹாரன் ஒலித்தும் எந்த அசைவும் இல்லாமல் போதையில் படுத்து கிடந்தார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் வாகன ஓட்டிக ளும், அவ்வழியே சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்குள் வாகனங்கள் செல்ல முடியாததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுபற்றி அறிந்ததும் அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து சாலையில் படுத்து கிடந்த வாலிபரை கண்டித்து அங்கிருந்த செல்லுமாறு அறிவுரை கூறினர்.

ஆனால் போதை ஆசாமி அதனை காதில் வாங்கிக் கொள்ளாமல் போலீசாரி டம் வாக்குவாதம் செய்தார். தரை மிகவும் சூடாக இருக்கிறது. படுக்க பெட் எடுத்து வாருங்கள் என்று கூறி ரகளையில் ஈடுபட்டார். மேலும் அவர் தரையில் படுப்பதிலேயே குறியாக இருந்தார்.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த போலீசார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் அங்கிருந்து செல்ல மறுத்து அடம் பிடித்த போதை வாலிபர் போலீசார் கால்களை பிடித்து போதை மயக்கத்தில் உளறினார். இதற்குள் அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் போதை வாலிபரின் அட்ட காசத்தை வேடிக்கை பார்த்தபடி இருந்தனர்.

நேரம் செல்ல செல்ல கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் போதை வாலிபரின் கை, கால்களை பிடித்து குண்டுகட்டாக அங்கிருந்து அகற்றி அருகில் உள்ள போலீஸ் பூத்தின் பக்கத்தில் அமர வைத்தனர். அப்போதும் என்ன நடக்கிறது என்று தெரியாத நிலையில் அவர் உளறிக் கொண்டிருந்தார்.

போதை நபரை அங்கிருந்து அப்புறப்படுத்திய பின்னரே அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் சீரானது. பின்னர் நீண்ட நேரத்திற்கு பிறகு அந்த போதை வாலிபர் அங்கிருந்து சென்றார். சுமார் ஒரு மணிநேரம் போதை நபர் போலீசாரை திணறடித்ததால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News