பருவநிலை மாற்றத்தினால் வரக்கூடிய காய்ச்சல்தான் பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் நலவழித்துறை அறிவுறுத்தல்
- கடந்த சில நாட்களாக அனைத்து மருத்துவமனைகளிலும் காய்ச்சலுடன் கூடிய புற நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது.
- கோடைக்காலம் முடிந்து மழைக்காலம் தொடங்கும் காலங்களில் இயல்பாக வரக்கூடிய ஒரு வகை காய்ச்சல்தான்.
காரைக்கால்:
காரைக்கால் மாவட்ட நலவழித்துறை துணை இயக்குநர் டாக்டர் சிவராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காரைக்கால் மாவட்டம் முழுவதும், கடந்த சில நாட்க–ளாக அனைத்து மருத்துவமனைகளிலும் காய்ச்சலுடன் கூடிய புற நோயாளிகளின் எண்ணிக்கை அதிக–மாகக்காணப்படுகிறது. முக்கியமா குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்தக் காய்ச்சல் வழக்க–மாக பருவநிலை மாற்றத்தினால் வரக்கூடிய காய்ச்சல்தான். இந்த காய்ச்சல் நம் மாவட்டத்தில் மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களிலும் பரவ–லாக காணப்படுகிறது. கோடைக்காலம் முடிந்து மழைக்காலம் தொடங்கும் காலங்களில் இயல்பாக வரக்கூடிய ஒரு வகை காய்ச்சல்தான். எனவே, பொதுமக்கள் யாரும் இந்த காய்ச்சல் குறித்து அச்சப்படத் தேவையில்லை.
இந்த காய்ச்சல் 4 அல்லது 5 நாட்களில் தானாகவே சரியாகக் கூடியது. இருப்பினும் அதிகப்படியான காய்ச்சல், இருமல், உடல் வலி இருந்தால், அருகில் உள்ள அரசு மருத்துவமனை, டாக்டரை அணுகி சிகிச்சைப் பெற வேண்டுகிறோம். சுய மருத்துவத்தை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். மேலும், வைரஸ் கிருமி–கள் நம் சுவாசப் பாதையில் நுழையாமல் இருக்க, அனைவரும் முகக் கவசம் அணிவது அவசியம். மேலும் கைகளை சோப்புப் போட்டு கழுவவும், சுத்த–மான உணவுப் பொருட்களை சூடாக உட்கொள்ளவும் வேண்டும். சுடு நீரை பருகவேண்டும். காய்ச்சல் உள்ள குழந்தைகளை பள்ளிக்கும், பொதுவெளிக்கும் அனுப்ப வேண்டாம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.