உள்ளூர் செய்திகள்

மேற்காரைகள் பெயர்ந்து காணப்படும் ரேஷன் கடை கட்டிடம்.

மேற்காரைகள் பெயர்ந்த நிலையில் இயங்கி வரும் ரேஷன் கடை

Published On 2022-09-29 13:53 IST   |   Update On 2022-09-29 13:53:00 IST
  • அடிக்கடி பெயர்ந்து விழுந்து வருவதால் கடைக்கு வரும் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
  • ஆபத்தான நிலையிலுள்ள கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் முத்துப்பேட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட மேலப்பெருமழை ஊராட்சியில் உள்ள ரேஷன் கடை கட்டிடம் பழுதடைந்து உள்ளது இதை உடனே சீரமைக்க வேண்டும் என்று மேலப்பெருமழை பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் கட்டிடத்தை பார்வையிட்டு சீரமைத்து தருமாறு அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கட்டிடத்தின் மேல் பகுதி பழுதடைந்து உள்ளது. ரேஷன் கடையின் மேற்காரைகள் அடிக்கடி பெயர்ந்து விழுந்து வருவதால் கடைக்கு வரும் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

மிகவும் ஆபத்தான நிலையில் கட்டிடம் பழுதடைந்து உள்ளது. எனவே உடனடியாக ரேஷன்கடை கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News