உள்ளூர் செய்திகள்

சாலை பணிகளை கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்த காட்சி.

மாடவீதியில் சிமெண்டு சாலை பணிகளை கலெக்டர் ஆய்வு

Published On 2023-10-22 07:00 GMT   |   Update On 2023-10-22 07:00 GMT
  • பணி நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது
  • இந்த மாத இறுதிக்குள் முழுமை பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

வேங்கிக்கால்:

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தேரோடும் மாடவீதிகளில் கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

இதில் முதல் கட்டமாக திருவூடல் தெரு சந்திப்பு முதல் காந்திசிலை வரை உள்ள ஆயிரம் மீட்டர் தூரத்திற்கு கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த சாலை பணிகளை கலெக்டர் முருகேஷ் பார்பவையிட்டு பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த பணிகள் இந்த மாத இறுதிக்குள் முழுமை பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட ப்பொறியாளர் ரகுராமன், நகராட்சி ஆணையாளர் ந.தட்சணா மூர்த்தி, பொறியாளர் நீலேஸ்வர், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பழனி ராஜூ, உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன், உதவி மின் பொறியாளர் சங்கர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

அடுத்த மாதம் நடைபெற உள்ள திருக்கார்த்திகை தீபத்திருவிழா தேரோட்டம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் சிமெண்ட் சாலையில் நடைபெறும்.

தேரோட்டத்திற்கு வசதியாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மாடவீதிகளில் மின் கம்பங்களில் சென்று கொண்டிருந்த மின் வயர்கள் அனைத்தும் புதைவழி மின் தடமாக மாற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News