உள்ளூர் செய்திகள்
காலை உணவு திட்டம் குறித்து கலெக்டர் ஆய்வு
- 2,270 சமையல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்
- பலர் கலந்து கொண்டனர்
ேவங்கிக்கால்:
திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் கிராம ஊராட்சியில் உள்ள அரசு மாதிரி ஆரம்ப பள்ளியில் முதல் அமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தும் முறை குறித்து கலெக்டர் பா.முருகேஷ் ஆய்வு செய்தார்.
மேலும் பள்ளி மாணவர்களுக் கலெக்டர் உணவு பரிமாறினார். தொடர்ந்து பேசிய ஆட்சியர் திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் 1,581 பள்ளிகளில் படிக்கும் 88 ஆயிரத்து 988 மாணவ மாணவிகள் பயன்பெறுகிறார்கள்.
இதற்காக 2,270 சமையல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்தார். இதில் மகளிர் திட்ட இயக்குநர் சையித் சுலைமான், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருணாசலம், பிரித்விராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.