உள்ளூர் செய்திகள்

சிமெண்டு சாலை பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்த காட்சி.

தமிழகத்தில் முதன்முறையாக திருவண்ணாமலை மாட வீதியில் நவீன எந்திரம் மூலம் சிமெண்டு சாலை

Published On 2023-09-13 14:49 IST   |   Update On 2023-09-13 14:49:00 IST
  • அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
  • தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தார்

வேங்கிக்கால்:

திருவண்ணாமலை கோவில் மாடவீதியில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விமான நிலையத்திற்கு இணையான கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதியில் அமைக்கப்பட்டு வரும் கான்கிரீட் சிமெண்டு சாலை அமைக்கும் பணியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அவர் கூறியதாவது:-

திருப்பதியில் உள்ளதைப்போல் கான்கிரீட் சிமெண்ட் சாலைகள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மாட வீதியில் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தார்.

தற்போது அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு கடந்த ஆறு மாத காலமாக அந்த பணிகள் நடைபெற்று வருகிறது.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட சிறப்பு பேவர் பிளாக் எந்திரத்தின் மூலம் விமான நிலையத்திற்கு இணையான தரத்தில் கான்கிரீட் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

நெடுஞ்சாலைத்துறை சார்பில் தமிழ்நாட்டில் முதன் முறையாக இந்த எந்திரத்தை பயன்படுத்தி திருவண்ணா மலை அண்ணாமலையார் கோவில் மாடவீதிகளில் சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சாலை அமைக்கும் பணிகளை அக்டோபர் 10-ந் தேதிக்குள் முடிக்க உத்தரவிட ப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்படும் கான்கிரீட் சிமெண்ட் சாலையில் தேர் தங்குதடையின்றி குறித்த நேரத்தில் மாட வீதியில் வலம் வந்து தனது நிலையை அடையும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, நெடுஞ்சாலைத் துறை தலைமை பொறியாளர் சந்திரசேகரன், கலெக்டர் பா.முருகேஷ், மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மு.பெ.கிரி எம்.எல்.ஏ, தொழிலாளர் நல அரசு பிரதிநிதி இரா ஸ்ரீதரன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன், நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், துணைத் தலைவர் ராஜாங்கம், நகராட்சி ஆணையாளர் தட்சணா மூர்த்தி, ஒப்பந்ததா ரர்கள் துரை வெங்கட், ப்ரியா விஜயரங்கன், நகரமன்ற உறுப்பினர்கள் சுமதி அருண்குமார், மெட்ராஸ் சுப்பிரமணி, மக்கள் நண்பர்கள் குழு தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News