உள்ளூர் செய்திகள்
தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு பேரணி
- பதாகைகளை கைகளில் ஏந்தி சென்றனர்
- தாசில்தார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
வந்தவாசி:
வந்தவாசியில் தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
வந்தவாசி வட்ட வருவாய்த்துறை மற்றும் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி ஆகியவை சார்பில் இந்த பேரணி நடந்தது.
தாசில்தார் பொன்னுசாமி கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். தாசில்தார் அலுவலக வளாகத்திலிருந்து புறப்பட்ட பேரணி பஜார் வீதி, தேரடி, காந்தி சாலை வழியாகச் சென்றது.
பேரணியில் பங்கேற்ற ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி கல்லூரி மாணவிகள் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி சென்றனர்.
பேரணியில் துணை தாசில்தார் சரவணன், வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன், கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் மற்றும் கல்லூரி பேராசிரியைகள் பங்கேற்றனர்.