உள்ளூர் செய்திகள்
கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
- அனுமதி இன்றி லாரியில் மண் கடத்தல்
- மோட்டார் சைக்கிளை தள்ளி விட்டு சென்றனர்
செய்யாறு:
செய்யாறு தாலுகா அனப்பத்தூர் கிராமத்தில் செங்கல் சூளைக்கு அரசு அனுமதி இன்றி மண் எடுத்து செல்வதாக கிராம நிர்வாக அலுவலர் பாரத் (வயது 27) என்பவருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் மோட் டார்சைக்கிளில் விரைந்து சென்று அனுமதி இன்றி மண் அள்ளிச் சென்ற லாரியை மடக்கி பிடித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த லாரியின் உரிமையாளர் ஆனந்தன் மற்றும் சண்முகம், ஹரி ஆகியோர் கிராம நிர்வாக அலுவலர் பாரத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து மோட்டார் சைக்கிளை தள்ளி விட் டுவிட்டு லாரியை எடுத்துச் சென்றனர்.
இதுகுறித்து பாரத்கொடுத்த புகாரின் பேரில் அனக்காவூர் சப்-இன்ஸ்பெக்டர் கன்னியப்பன் வழக்குப்பதிவு செய்து லாரி உரிமையாளர் ஆனந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.