திண்டிவனம் காவேரிப்பாக்கம் ஏரிக்கரையில் குப்பைகளுக்கு வைக்கும் தீயால் வாகன ஓட்டிகள்அவதி
- திண்டிவனம் காவேரிப்பாக்கம் ஏரிக்கரையில் குப்பைகளுக்கு தீ வைக்கப்பட்டது.
- திண்டிவனத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு தினமும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளு ம்காவேரிப்பாக்கம் ஏரிக்கரை பகுதி வழியாக சென்று வருகிறார்கள்.
விழுப்புரம்:
திண்டிவனத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு தினமும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளு ம்காவேரிப்பாக்கம் ஏரிக்கரை பகுதி வழியாக சென்று வருகிறார்கள். இந்த பகுதியில் சாலையின் இருபுறமும் மலைபோல் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. மேலும் குப்பைகள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்துகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அந்த இடத்தை கடக்கும் போது கையில் மூக்கைப் பிடித்துக் கொண்டே முகத்தை மூடியவாறு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் மர்ம நபர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் இந்த குப்பைகளுக்கு அவ்வப்போது தீவைத்து விடுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் பற்றி தெரியாமல் செல்வதுடன் புகையினால் கண் எரிச்சல் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்னைகளால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள உயிர் மரங்களும் தீயில் எரிந்து போகிறது. இதுபோல் இந்த பகுதியில் உள்ள குப்பைகளை அடிக்கடி மர்ம நபர்கள் தீ வைப்பது வாடிக்கையாக உள்ளது. அதனால் இந்த பகுதியில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை அகற்றுவதுடன் அந்த பகுதியில் குப்பைகள் கொட்டாமல் வேறு ஒரு இடத்தில் குப்பை கொட்டுவதற்கு நகராட்சி நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.