திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்த 18 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் - முன்னாள் அமைச்சர் எஸ்.பி., வேலுமணி வழங்கினார்
- அ.தி.மு.க பொதுச்செயலாளர் பிறந்த நாளையொட்டி தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டது.
திருப்பூர் :
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் பிறந்த நாளையொட்டி திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்த 18 குழந்தைகளுக்கு முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் ஏற்பாட்டின் பேரில் தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவிற்கு மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ.,தலைமை தாங்கினார். அவைத் தலைவர் பழனிச்சாமி .முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., என்.எஸ்.என்.நடராஜன், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் கவுன்சிலர் அன்பகம் திருப்பதி, இணைச் செயலாளர் சங்கீதா சந்திரசேகர், பகுதி செயலாளர் கே. பி.ஜி.மகேஷ்ராம், அம்மா பேரவை தலைவர் அட்லஸ் லோகநாதன், திருப்பூர் மாநகர் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எஸ்.பி.என். பழனிச்சாமி, இணைச் செயலாளர் விவேகானந்தன், தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், இணைச் செயலாளர் ஆண்டவர் பழனிசாமி உள்படநிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.