உள்ளூர் செய்திகள்

பழமையான கல் தொட்டியை படத்தில் காணலாம்

250 ஆண்டு பழமையான கல் தொட்டி கண்டெடுப்பு

Published On 2022-06-29 06:30 GMT   |   Update On 2022-06-29 06:30 GMT
  • நம் முன்னோர் கால்நடைகளின் தாகத்தை போக்கும் வகையில் இதுபோன்ற கல் தொட்டிகளை பல்வேறு இடங்களில் அமைத்திருந்தனர்.
  • கிராம மக்கள் அங்குள்ள கோவிலில் இந்த கல் தொட்டியை வைத்து பாதுகாப்பதாக கூறியுள்ளனர்.

பல்லடம் :

பல்லடம் அடுத்த கேத்தனூர் ஊராட்சி, மானாசிபாளையம் கிராமத்தில் பல்லடம் வரலாற்று மையத்தினர் ஆய்வு செய்தபோது, பழமையான கால்நடை கல் தொட்டி ஒன்றை கண்டறிந்தனர்.

வரலாற்று மையத்தை சேர்ந்த பாண்டியன் கூறுகையில், விவசாய தொழில் நிறைந்த பல்லடம் வட்டாரத்தின் பல்வேறு பகுதிகளில், இதுபோன்ற பழமையான கால்நடை தொட்டிகளை காணலாம். நம் முன்னோர் கால்நடைகளின் தாகத்தை போக்கும் வகையில் இதுபோன்ற கல் தொட்டிகளை பல்வேறு இடங்களில் அமைத்திருந்தனர். கேத்தனூர் மானாசிபாளையத்தில்,க தண்ணீர் தொட்டி ஒன்று ரோட்டோரத்தில் கேட்பாரற்று மண் மூடி கிடந்தது. அதை சுத்தம் செய்து அதிலுள்ள எழுத்துகளை படிக்க முயன்றோம். ஆனால்எழுத்துகள் சேதமடைந்துள்ளதால் படிக்க இயலவில்லை.

ஏறத்தாழ 250 ஆண்டுகளுக்கு முந்தையதாக இது இருக்கலாம் என்றார்.இதையறிந்த கிராம மக்கள்அங்குள்ள கோவிலில் இந்த கல் தொட்டியை வைத்து பாதுகாப்பதாக கூறியுள்ளனர்.

Tags:    

Similar News