உள்ளூர் செய்திகள்

எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி தலைமையில் அ.தி.மு.க.கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்த காட்சி. 

பட்ஜெட் கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க.- பா.ஜ.க. வெளிநடப்பு : எந்த புதிய திட்டங்களும் இல்லாமல் மக்களை ஏமாற்றும் பட்ஜெட் - எதிர்க்கட்சி தலைவர் பேட்டி

Published On 2023-03-31 10:13 GMT   |   Update On 2023-03-31 10:13 GMT
  • பட்ஜெட் சமர்பிக்கப்படுவதற்கு முன்னால் மாமன்ற குழுதலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவில்லை.
  • மேலாண்மை, வரி ,பாதாள சாக்கடை வரி போன்றவற்றை கடுமையாக உயர்த்தி உள்ளனர்.

திருப்பூர் :

திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தின் போது அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பட்ஜெட் தொடர்பான விவாதம் நடத்துவதற்கு போதிய அவகாசம் வேண்டும். மக்களுக்கு பயன்பட க்கூடிய திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை எனக்கூறி வெளிநடப்பு செய்தனர்.வெளியே வந்த பின்னர் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி பேட்டி அளித்தார் .அவர் கூறியதாவது :- திருப்பூர் மாநகராட்சியில் பட்ஜெட் சமர்பிக்கப்ப டுவதற்கு முன்னால்மாமன்ற குழுதலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவில்லை. பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய வளர்ச்சி திட்டம், போக்குவரத்து நெரிசலை குறைக்க கூடிய திட்டம் எதுவும் பட்ஜெட்டில் இல்லை.அதேபோல் சொத்துவரி, திடக்கழிவு மேலாண்மை, வரி ,பாதாள சாக்கடை வரி போன்றவற்றை கடுமையாக உயர்த்தி உள்ளனர். மாநகராட்சி மக்களுக்கான சுகாதார பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சீர்மிகு நகரம் திருப்பூர் என்ற இலக்கை நோக்கி செல்ல புதிய திட்டங்கள் எதுவும் இல்லை.

உடனடியாக மெத்தன போக்கை கைவிட்டு உரிய காலகெடுவுக்குள் நான்காவது குடிநீர் திட்டத்தை மக்கள் பயன்பா ட்டுக்கு கொண்டுவர வேண்டும். மாநகராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தரக்கூடிய திட்டம் பட்ஜெட்டில் இல்லை.தொழில் நகரமான திருப்பூர் மிகவும் நெருக்கடியான சூழலில் தள்ளப்பட்டு இருக்கின்ற இந்த காலகட்டத்தில் திருப்பூர்மாநகராட்சி மக்களுக்கு பயன்படக்கூடிய வகையில் அல்லாமல் மிகவும்ஏமாற்றம் அளிக்கக்கூடிய வகையில் வெற்று அறிக்கையாகவே உள்ளது. இந்தபட்ஜெட்டை கண்டித்து அ.தி.மு.க. வெளிநடப்பு செய்துள்ளது என்றார்.மேலும் சாமாளியர்களுக்கான பட்ஜெட் இல்லை என்று கூறி பா.ஜ.க.வை சேர்ந்த கவுன்சிலர் தங்கராஜூம் வெளிநடப்பு செய்தார்.

Tags:    

Similar News