உள்ளூர் செய்திகள்

பட்டாசு வெடித்து கொண்டாடிய அ.தி.மு.க.,வினர்.

தாராபுரத்தில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

Published On 2023-08-26 05:15 GMT   |   Update On 2023-08-26 05:15 GMT
  • நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
  • கட்சியில் கருத்து வேறுபாட்டால் அ.தி.மு.க. இரண்டு அணியாக பிரிந்து செயல்பட்டு வந்தது.

தாராபுரம்:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பின்பு அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் இருந்து வந்தனர். கட்சியில் கருத்து வேறுபாட்டால் அ.தி.மு.க. இரண்டு அணியாக பிரிந்து செயல்பட்டு வந்தது.

எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டப்பட்டு அதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓ.பி.எஸ். உள்ளிட்ட 4 பேரை கட்சியிலிருந்து நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றினர். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் எதிர் மனுதாக்கல் செய்தனர்.

அதில் நேற்று சென்னை உயர் நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழு கூட்டம் செல்லும், 4 பேரை நீக்கியது செல்லும் என தீர்ப்பளித்தனர். அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்ததை அடுத்து பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் தாராபுரத்தில் அ.தி.மு.க.வினர் கொண்டாடினர்.

திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம் தாராபுரம் நகர அ.தி.மு.க. சார்பில் அண்ணா சிலை அருகே நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் பானுமதி, மாவட்ட பிரதிநிதி கோல்டன் ராஜ் ,நகர துணைச் செயலாளர் நாட்ராயன், நகரப் பொருளாளர் சாமுவேல், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ராமசாமி, முன்னாள் நகரச்செயலாளர் மலை மாரிமுத்து, நகர இளைஞரணி செயலாளர் தினேஷ், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அரசு குமாரன்(போக்குவரத்து), பழனி குமார் (மின்வாரியம்) , வார்டு செயலாளர்கள் ஸ்டுடியோ கார்த்திக் , மார்க்கெட் டேவிட் மற்றும் மகளிர் அணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News