உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

ஆய்வக நுட்புனர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

Published On 2022-10-13 06:07 GMT   |   Update On 2022-10-13 06:07 GMT
  • 16 ஆய்வக நுட்புனர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
  • மாதாந்திர ஊதியமாக ரூ.13 ஆயிரம் வழங்கப்படும்.

திருப்பூர் :

திருப்பூர் மாநகராட்சி தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் காலியாக உள்ள 16 ஆய்வக நுட்புனர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி டிப்ளமோ மெடிக்கல் லேபோரட்டரி டெக்னாலஜி, சர்ட்டிபிகேட் மெடிக்கல் லேபோரட்டரி டெக்னாலஜி, பி.எஸ்சி. மெடிக்கல் லேபோரட்டரி டெக்னாலஜி படித்து முடித்திருக்க வேண்டும். முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மாதாந்திர ஊதியமாக ரூ.13 ஆயிரம் வழங்கப்படும். முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணியாகும். தகுதியுள்ளவர்கள் பதிவு தபால் மூலமாக தலைவர், மாநகராட்சி நல சங்கம், திருப்பூர் மற்றும் ஆணையாளர், திருப்பூர் மாநகராட்சி, திருப்பூர் ஆகிய முகவரியில் விண்ணப்பிக்கலாம். வருகிற 28-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களை திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள தேசிய நகர்ப்புற சுகாதார திட்ட பிரிவில் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News