சாலையில் கிடந்த பணம்-நகையை மீட்டு கொடுத்த தம்பதிக்கு பாராட்டு
- 7 பவுன் சங்கிலி மற்றும் ரூ.2ஆயிரத்தை தவறவிட்டதாக போலீசில் புகார் அளித்தார்.
- சாலையில் கிடந்த மணி பர்சை திறந்து பார்த்தனர்.
தாராபுரம் :
திருப்பூர் தாராபுரத்தை அடுத்த ஆச்சியூரை சேர்ந்தவர் லட்சுமி (வயது 80). இவர் தனது மணிபர்சில் வைத்திருந்த 7 பவுன் சங்கிலி மற்றும் ரூ.2ஆயிரத்தை தவறவிட்டதாக போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தாராபுரத்தை அடுத்த கொழிஞ்சிவாடி,உப்புத்துறைபாளையத்தை சேர்ந்த செல்வராஜ், இவரது மனைவி சாரதா ஆகியோர் தாராபுரம்- கரூர் சாலையில் வந்த போது சாலையில் கிடந்த மணி பர்சை திறந்து பார்த்தனர். அதில் தங்கச்சங்கிலி ரூ.2ஆயிரம் இருந்தது.
அதனை அந்த தம்பதியினர் தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டனிடம் ஒப்படைத்து உரியவரிடம் ஒப்படைக்குமாறு கூறிவிட்டு சென்றனர். இதையடுத்து தாராபுரம் போலீசார் மூதாட்டி லட்சுமியை அழைத்து நகை,பணத்துடன் பர்சை காண்பித்தனர். அது தன்னுடைய நகை, பணம் என அடையாளம்் கூறினார். இதையடுத்து அவரிடம் 7 பவுன் சங்கிலி மற்றும் ரூ.2 ஆயிரத்தை போலீசார் ஒப்படைத்தனர். சாலையில் கிடந்த நகை மற்றும் பணத்தை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த செல்வராஜ், சாரதா தம்பதிைய போலீசார் சால்வை அணிவித்து பாராட்டினர்.