உள்ளூர் செய்திகள்

பள்ளித் தலைமை ஆசிரியர்  நூலகப் பொறுப்பாசிரியரிடம் புத்தகம் வழங்கிய காட்சி.   

உடுமலை பெண்கள் பள்ளிக்கு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

Published On 2023-08-17 07:10 GMT   |   Update On 2023-08-17 07:10 GMT
  • 6 முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 900 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
  • நிகழ்ச்சியில் தமிழாசிரியர்கள் வே. சின்னராசு, ராசேந்திரன் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

உடுமலை:

உடுமலைப்பேட்டை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 900 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு பள்ளி நூலகத்தில் தமிழ் ஆங்கில நாளிதழ்கள் மற்றும் தேன் சிட்டு சிறார் இதழ் மூலம் வாசிப்புப் பயிற்சி பெற்று வருகின்றனர்.

மாணவர்கள் படித்து பயன் பெறும் வகையில் பள்ளி நூலகத்திற்கு திருப்பூர் தமிழினி அமைப்பின் சார்பில் தமிழ் அறிவோம் என்னும் இலக்கண நூல்களின் தொகுப்பு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. நூல்களை கவிஞர் நா. மகுடேஸ்வரன் வழங்கியுள்ளார். பள்ளிக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட நூல்களைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ப. விஜயா நூல்களை வழங்க நூலகப் பொறுப்பாசிரியர் மரகதம் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் தமிழாசிரியர்கள் வே. சின்னராசு ,ராசேந்திரன் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News