ஜனநாயக கடமையை நிறைவேற்றி வரும் முதியோருக்கு கலெக்டர் பாராட்டு
- பொங்கலூரில் உலக முதியோர் தின விழா நடந்தது.
- முதியோர்களின் நலனை பாதுகாக்கவும், உரிமைகளுக்காகவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
திருப்பூர் :
பொங்கலூரில் உலக முதியோர் தின விழா நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் வினீத் பங்கேற்றார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தாலுகா, பொங்கலூர் பிரபஞ்ச அமைதி சேவாஷ்ரமத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் சார்பில் உலக முதியோர் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். விழாவில் மாவட்ட கலெக்டர் வினீத் பேசியதாவது:-
ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ள படி உலக முதியோர் தின விழா ஆண்டுதோறும் அக்டோபர் 1-ம் தேதி கொண்டாட ப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள மூத்த குடிமக்களை மதிக்கவும் மரியாதை செய்யவும், குடும்பம், சமூகம் மற்றும் நாட்டுக்கு அவர்கள் ஆற்றிய சேவைகளை நினைவு கூறும் விதத்தில் அவர்களின் அறிவு, ஆற்றல் மற்றும் சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் நாளாக கொண்டாடப்படுகிறது. முதியோர்களின் நலனை பாதுகாக்கவும், உரிமைகளுக்காகவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மூத்த குடிமக்களுக்காக அரசு 2007-ம் ஆண்டு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் இயற்றப்பட்டு 2009-ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தில் தீர்ப்பாயம் அமைத்து இழந்த சொத்துக்களை மீண்டும் பெற வசதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் தீர்ப்பாயம் மூலம் (திருப்பூர், தாராபுரம்,உடுமலை) இதுவரை 324 மனுக்கள் பெறப்பட்டு 303 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட கலெக்டரிடம் 89 மேல் முறையீடு மனுக்கள் பெறப்பட்டு, அதில் 83 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமரச அலுவலரிடம் ஜனவரி 2022 முதல் ஆகஸ்ட் 2022 வரை 27 மனுக்கள் பெறப்பட்டு, 25 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
மேலும் முதியோர்களு க்காக இலவச அரிசி திட்டம், ஓய்வூதியம், அரசு மருத்துவமனைகளில் தனி படுக்கை வசதி அமைக்கப்ப ட்டுள்ளது. ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்காக அவர்களை பராமரிக்கும் பொருட்டு அரசு முதியோர் இல்லங்களை உருவாக்கியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 12 முதியோர் இல்லங்கள் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் 2007-ன் கீழ் சமூக நலத்துறையில் பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.12 முதியோர் இல்லங்களில் 250 ஆண் மற்றும் பெண் முதியோர்கள் தங்கி உள்ளனர். மேலும் மத்திய அரசு முதியோருக்காக 14567 என்ற உதவி எண்ணை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதன் பின்னர் உலக முதி யோர் தின விழாவில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி உலகம் முதியோர் தினத்தை முன்னிட்டு 80 வயதுக்கு மேற்பட்ட 13 வாக்காளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை வழங்கி சிறப்பு செய்தார். மேலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முதியோர் இல்லங்களுக்கு ஊன்று கோல்கள் மற்றும் ரோட்டரி சங்கத்தின் சார்பில் ரூ.1.50 லட்சத்திற்கான காசோலை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார்கள்.
இவ்விழாவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முருகேசன், மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் எஸ் சௌமியா, மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா, யூனிவர்சல் பீஸ் பவுண்டேஷன் நிறுவனர் ராஷ்ரிய ரத்னா குருஜி.சிவாத்மா சர்வாலயம் முதியோர் இல்ல தலைமை நிர்வாக அதிகாரி ஆர் ராஜம்மாள், பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் சேவையர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.