தாராபுரம் மக்கள் சிறப்பு நீதிமன்றத்தில் 39 வழக்குகளுக்கு சமரச தீர்வு
தாராபுரம் :
மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் சிறப்பு நீதிமன்ற முகாம் நடைபெற்றது.
தாராபுரம் வட்ட சட்ட பணிக்குழு தலைவர் நீதிபதி எம்.தர்மபிரபு தலைமை தாங்கினார்.ஓய்வுபெற்ற நீதிபதி நாகராஜ், குற்றவியல் நீதிமன்றநீதிபதி எஸ்.பாபு, நீதிபதி மதிவதனி வணங்காமுடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வழக்குகள் சமரச தீர்வு மூலம் 2 மோட்டார் வாகன விபத்து வழக்குகள், 30 உரிமையியல் வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள்-2, குடும்ப வன்முறை வழக்கு-1, குடும்ப வழக்கு-2, செக் மோசடி வழக்குகள்-3 என மொத்தம் 39 வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் சமரச தீர்வு காணப்பட்டது.
இதில் ரூ.41 லட்சத்திற்கான குடும்ப வழக்கை நீதிபதிகள் சுமூகமாக முடித்து வைத்தனர். மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 39 பயனாளிகள் பலன் பெற்றனர்.தீர்வு காணப்பட்ட வழக்குக்காக சான்றிதழ்களை வட்ட சட்ட பணிக்குழு நீதிபதி எம்.தர்மபிரபு பயனாளிகளுக்கு வழங்கினார். குடும்ப வழக்கை வக்கீல் எஸ்.டி.சேகர் வாதாடி வந்ததை நீதிபதிகள் முடித்து வைத்தனர். முகாமில் வக்கீல்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.