அணையின் நீர்மட்டம் கிடு கிடு உயர்வு - அமராவதி ஆற்றங்கரையோரத்தில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
- ஜூலை 15ல் அமராவதி அணை நிரம்பி மூன்று மாதத்திற்கும் மேலாக உபரி நீர், ஆறு மற்றும் பிரதான கால்வாயில் திறக்கப்பட்டது.
- அணைக்கு வினாடிக்கு, 1,134 கனஅடி நீர் வரத்து உள்ளது.
உடுமலை :
திருப்பூர் மாவட்டம், உடுமலை அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டங்கள் பயன்பெற்று வருகின்றன. நடப்பாண்டில், தென்மேற்கு பருவ மழை காரணமாக, ஜூலை, 15ல் அமராவதி அணை நிரம்பி மூன்று மாதத்திற்கும் மேலாக உபரி நீர், ஆறு மற்றும் பிரதான கால்வாயில் திறக்கப்பட்டது.
அணையிலிருந்து பழைய, புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு நீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் அணை வேகமாக நிரம்பி வருகிறது. நேற்று இரவு, 7:00 மணி நிலவரப்படி, நீர்மட்டம் மொத்தமுள்ள, 90 அடியில், 87.34 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,134 கனஅடி நீர் வரத்து உள்ளது.எந்த நேரமும் அணை நிரம்பி, உபரி நீர் திறக்கப்படும் வாய்ப்புள்ளதால், ஆற்றின் கரையோரத்திலுள்ள, திருப்பூர், கரூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைவி டுக்கப்ப ட்டுள்ளது.