உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

வாரத்துக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் - நுகர்வோர் அமைப்பினர் கோரிக்கை

Published On 2023-03-25 05:21 GMT   |   Update On 2023-03-25 05:21 GMT
  • கடைகள் ரூ.2 கோடியே 51 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
  • ஏலத்தை ரத்து செய்யக்கூடாது.

திருப்பூர் :

திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்பினருடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் நல்லூர் நுகர்வோர் நல மன்ற தலைவர் சண்முகசுந்தரம் அளித்த மனுவில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பூ மார்க்கெட் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த கடைகள் ரூ.2 கோடியே 51 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இதனால் மாநகராட்சிக்கு அதிக தொகை வருவாயாக கிடைக்கும். எக்காரணத்தை கொண்டும் ஏலத்தை ரத்து செய்யக்கூடாது. அவ்வாறு ரத்து செய்தால் பொதுநலன் கருதி கோர்ட்டில் வழக்கு தொடரப்படும்.

இதுபோல் மாநகராட்சி பகுதியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும். வாரத்துக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று நுகர்வோர் அமைப்பினர் கோரிக்கை வைத்தனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆணையாளர் தெரிவித்தார்.

Tags:    

Similar News