பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் நிறைவு விழா
- சான்றிதழ் வழங்குதல் மற்றும் பட்டிமன்றம்நிகழ்ச்சிகளுடன் நிறைவு விழா மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் நடைபெற்றது.
- பள்ளி, கல்லூரி மற்றும் பொது இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைஒழிப்பு குறித்து சட்டவிழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
திருப்பூர் :
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிபதி தலைமையில்கடந்த 15 நாட்களாக திருப்பூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளில்நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் கோர்ட்டு பெண் பணியாளர்கள், பெண் வக்கீல்களுக்கானபல்வேறு போட்டிகள், சான்றிதழ் வழங்குதல் மற்றும் பட்டிமன்றம்நிகழ்ச்சிகளுடன் நிறைவு விழா மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் நடைபெற்றது.
ஆசிரியர் சிவகாமி வரவேற்றார். குடும்பநல நீதிபதி சுகந்தி சிறப்புரையாற்றினார். முதன்மை மாவட்ட நீதிபதிஸ்வர்ணம் நடராஜன் தலைமை தாங்கி பேசும்போது, சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலமாக மூத்த வக்கீல்கள், சமூக ஆர்வலர்கள்,மனநல மருத்துவர்கள் கொண்ட குழுவுடன் பல்வேறு பள்ளி, கல்லூரி மற்றும் பொது இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைஒழிப்பு குறித்து சட்டவிழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. திருப்பூர்மாவட்ட நீதிமன்ற பாலின உணர்திறன் குழு மூலம் பெண் நீதிமன்றபணியாளர்கள், பெண் வக்கீல்களுக்கு பாலின சம உரிமை, பாலியல் வன்முறைக்கு எதிரான தற்காப்பு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்மற்றும் பாலியல் துன்புறுத்தல்களை புகார்களாக பெற்று அதற்குரியநடவடிக்கை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
விழாவில் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மா, தலைமைகுற்றவியல் நீதித்துறை நடுவர் புகழேந்தி, சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் மேகலா மைதிலி, குற்றவியல் நீதித்துறைநடுவர்கள் பாரதி பிரபா, முருகேசன், கார்த்திகேயன், பழனிக்குமார், பெண் வக்கீல்கள், பெண் கோர்ட்டு ஊழியர்கள் பங்கேற்றனர்.