பள்ளி -கல்லூரி மாணவர்களுக்கு மின் சிக்கனம் குறித்த கட்டுரை போட்டி
- தாராபுரம் கோட்ட மின் வாரியம் சார்பில் மின் சிக்கன வார விழா ஒருவார காலம் நடத்தப்படுகிறது.
- மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தாராபுரம் :
மின் சிக்கன வார விழாவையொட்டி தாராபுரம் கோட்ட மின் வாரியம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மின் சிக்கனம் குறித்த கட்டுரைப்போட்டி நடத்தப்படுகிறது.
இது குறித்து மின் வாரிய செயற்பொறியாளா் வ.பாலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :- தாராபுரம் கோட்ட மின் வாரியம் சார்பில் மின் சிக்கன வார விழா ஒருவார காலம் நடத்தப்படுகிறது. மின்சாரத்தை சேமிக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஐ.எஸ்.ஐ. முத்திரை கொண்ட மின் சாதனங்களான எல்.இ.டி. விளக்குகள், மின் விளக்குகள், மின் சாதனங்கள், குளிா்சாதனப்பெட்டி, வாஷிங்மிஷின் ஆகியவற்றை பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும். டி.வி, கணினி உள்ளிட்ட மின் சாதனங்களை சுவிட்ச் மூலம் நிறுத்த வேண்டும்.
மேலும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் இணையதளம் வாயிலாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மின் சிக்கனம் குறித்த கட்டுரைப்போட்டி மற்றும் ஓவியப்போட்டி 19-ந் தேதி வரை நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மின் சிக்கன வார விழாவான 20-ந் தேதி பரிசுகள் வழங்கப்படும்.
கட்டுரை போட்டிக்கு கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒரு தலைப்பின் கீழ் தமிழ் அல்லது ஆங்கிலம் இரண்டு தலைப்புகளில் எழுதி அனுப்ப வேண்டும். ஆங்கில போட்டியில் கலந்துகொள்வதற்கான இணையதள முகவரி https://forms.gle/GMDToAAfehTNGLkZ6. மின்னாற்றல் சேமிப்பில் என் பங்கு, மின்னாற்றல் ஆடம்பரத்திற்கா? அத்தியாவசியத்திற்கா?, மின்னாற்றல் சேமிப்பின் அவசியம்.
அதே போன்று ஓவியப்போட்டிக்கு கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒரு தலைப்பு தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். போட்டியில் கலந்துகொள்வதற்கான இணையதள முகவரி https://forms.gle/gNFcYtxZaASBXVe8 .மின்னாற்றல் சேமிப்பும் பசுமை உலகமும், நாளைய இருளை தடுப்போம், இன்றே விழிப்புணர்வு பெறுவோம், இயற்கை முறை மின்சாரம் காலத்தின் கட்டாயம், மின் சிக்கனம் மற்றும் சேமிப்பு குறிப்புகள், மின்சாரத்தை அளவோடு பயன்படுத்தி வளமோடு வாழ்வோம், சூரிய ஒளி இருக்க மின் ஒளி எதற்கு? மின்சாரம் நாட்டின் ஆதாரம். மின் சிக்கனம் தேவை இக்கணம் ஒரு யூனிட்டு சேமிப்பு இரண்டு யூனிட்டு உற்பத்திக்குச் சமம், 6 நட்சத்திர குறியீடு கொண்ட மின் உபகரணங்களை பயன்படுத்தி மின் விரயம் தவிர்த்து மின் தேவையினை குறைப்போம், இன்றைய மின் சேமிப்பு வரும் சந்ததிக்கு வழிகாட்டி, மின் சிக்கனம் செய்வோம் இயற்கை வளங்களைக் காப்போம். திறன்மிகு மின் உபகரணங்களை பயன்படுத்தி மின்சாரத்தை சேமிப்போம் உள்ளிட்ட தலைப்புகளில் இணையதளத்தில் பதிவிடலாம்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.