உடுமலை தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை நீட்டிப்பு
- பதிவுக்கான அவகாசம் வருகிற 20-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- 14 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
உடுமலை :
உடுமலை அரசு கலைக்கல்லூரி சாலையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை பதிவு, மே 24-ந்தேதி தொடங்கியது. ஆன்லைனில் விண்ணப்பபதிவு செய்ய ஜூன் 7ந்தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பதிவுக்கான அவகாசம் வருகிற 20-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 14 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை.
எலக்ட்ரீசியன் 20 இடங்கள், பிட்டர் (20), மோட்டார் வாகன மெக்கானிக் (24), இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் மற்றும் டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீசியன் (40), மேனுபேக்சரிங் பிராசஸ் கன்ட்ரோல் மற்றும் ஆட்டோமேஷன் (40), அட்வான்ஸ்டு சிஎன்சி., மெஷின் டெக்னீசியன் (20) உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயர்மேன் (20), வெல்டர் (40) ஆகிய இரண்டு பிரிவுகளுக்கும் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை, www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பங்களை இலவசமாக ஆன்லைனில் பதிவு செய்ய விண்ணப்பதாரரின் அசல் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், ஜாதிசான்றி தழ், ஆதார் அட்டை மற்றும் இரண்டு போட்டோகளுடன் தொழிற்பயிற்சி நிலையத்தை வேலை நாட்களில் காலை, 9 மணி முதல் மாலை5மணி வரை நேரில் அணுகலாம்.
கூடுதல் தகவல் பெற 04252-223340, 99442 06017, 95855 39650, 73732 78939 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ராஜேஸ்வரி தெரிவித்தார்.