உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

வெண்டைக்காய் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

Published On 2022-07-29 08:24 GMT   |   Update On 2022-07-29 08:24 GMT
  • விசேஷ நாட்களில் வெண்டைக்கு விலை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
  • கிணற்றுப்பாசனத்துக்கு சீசனை திட்டமிட்டு இந்த சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.

குடிமங்கலம் :

வெண்டைக்கு சந்தையில் நிலையான விலை கிடைத்து வருகிறது. விசேஷ நாட்களில், விலை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

உடுமலை கண்ணமநாயக்கனூர், கணக்கம்பாளையம், ஆண்டியகவுண்டனூர், குட்டியகவுண்டனூர்,பெரிசனம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வெண்டை பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. கிணற்றுப்பாசனத்துக்கு சீசனை திட்டமிட்டு இந்த சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். அவ்வகையில், ஆடிப்பட்ட சாகுபடியில் வெண்டைக்காய் அறுவடை துவங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி உடுமலை உழவர் சந்தையில் வெண்டை கிலோ 18-24 ரூபாய் வரை விலை கிடைத்தது.விவசாயிகள் கூறுகையில், பண்டிகை மற்றும் முகூர்த்த சீசனில் வெண்டைக்கு நல்ல விலை கிடைக்கும். வரும் ஆவணி மாதத்தில் விலை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்.

ஏக்கருக்கு 12 டன் வரை மகசூல் கிடைக்கும் வாய்ப்புள்ளது. காய் பறிப்புக்கு போதிய ஆட்கள் கிடைப்பதில்லை என்றனர்.

Tags:    

Similar News