பல்லடத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்
- நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனை மற்றும் சிகிச்சை,மருந்துகள் அளிக்கப்பட்டது.
- முகாமில் 236 பேருக்கு கண்புரை, பார்வை குறைபாடு, கண்ணில் நீர் வடிதல் உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்தனர்.
பல்லடம் :
பல்லடம் அரிமா சங்கம், நகராட்சி நிர்வாகம், திருப்பூர் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை,மற்றும் சிகிச்சை முகாம் பல்லடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இந்த முகாமில் 236 பேருக்கு கண்புரை, பார்வை குறைபாடு, கண்ணில் நீர் வடிதல் உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனை மற்றும் சிகிச்சை,மருந்துகள் அளிக்கப்பட்டது. 26 நபர்கள் கண் புரை அறுவை சிகிச்சைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு, கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இலவச கண் சிகிச்சை முகாமை பல்லடம் நகர மன்றத்தலைவர் கவிதாமணி ராஜேந்திர குமார் துவக்கி வைத்தார். அரிமா சங்க நிர்வாகிகள் நடராஜன், குமார், பாலன், மற்றும் நிர்வாகிகள், மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.