வெள்ளகோவிலில் பால் கொள்முதல் நிலைய கட்டிட பணி தொடக்க விழா
- ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள பால் கொள்முதல் நிலையம்.
- துவக்கப்பள்ளியின் பவள விழா மற்றும் காலை உணவு திட்டம் உள்ளரங்கம் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம், நாகமநாயக்கன்பட்டி ஊராட்சியில் ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள பால் கொள்முதல் நிலைய கட்டிட பணி துவக்க விழா நடைபெற்றது.
புதிய பால் கொள்முதல் நிலைய கட்டிட பணியை தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார். பிறகு சிலம்பகவுண்டன்வலசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் பவள விழா மற்றும் காலை உணவு திட்டம் உள்ளரங்கம் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், வெள்ளகோவில் நகர் மன்ற தலைவி மு.கனியரசி, நாகமநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவி கவிதா.திமுக பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ்.மோகன செல்வம், வெள்ளகோவில் திமுக ஒன்றிய செயலாளர் மோளக்கவுண்டன்வலசு கே. சந்திரசேகரன், வெள்ளகோவில் நகர செயலாளர் சபரி.எஸ்.முருகானந்தன், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் லோகநாதன். முன்னாள் நகரச் செயலாளர் கே.ஆர். முத்துகுமார், இளைஞர் அணி ஆதவன் ஜெகதீஷ் மற்றும் ஊராட்சி பிரதிநிதிகள், பாசன சபை தலைவர்கள் கலந்து கொண்டனர்.சிலம்பகவுண்டன் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த பள்ளி பவள விழா நிகழ்ச்சியில் வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஆர்.வெங்கடேசசுதர்சன். பச்சாபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எம்.வரதராஜன் ,ஆணையாளர் ஜெயக்குமார் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.