உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டம் - விவசாயிகளுக்கு அழைப்பு

Published On 2022-09-05 04:59 GMT   |   Update On 2022-09-05 04:59 GMT
  • 50 ஹெக்டர் பரப்பளவில் ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
  • கால்நடை விவசாயிகளுக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.

பல்லடம் :

பல்லடம், ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துபல்லடம் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் மோகனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பல்லடம் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள மாணிக்காபுரம், பருவாய், புளியம்பட்டி, மல்லேகவுண்டம்பாளையம், பூமலுார் ஆகிய கிராமங்களுக்கு முன்னுரிமை அளித்து, 50 ஹெக்டர் பரப்பளவில் ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.ஒரு எக்டர் பாசன நிலமுள்ள கால்நடை விவசாயிகளுக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும். பண்ணையம் அமைத்து பயறு வகைகள் சாகுபடி செய்வதற்கு விதைகளும், முருங்கை நாற்றுகள் ஊடுபயிராகவும் வழங்கப்படும்.மேலும் பயனாளிகளுக்கு கால்நடை வாங்கவும், மண்புழு உரப்படுகைகள், தேனீ பெட்டி அமைப்பதற்கும் பின்னேற்பு மானியம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு பல்லடம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை விவசாயிகள் அணுகி தெரிந்துகொள்ளலாம். இவ்வாறுஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News