பள்ளி,கல்லூரிகளில் இந்தி அறிமுகம் - இந்து முன்னேற்ற கழகம் வரவேற்பு
- நீண்ட நாட்களுக்கு முன்பே அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடகாவில் இந்தியை அறிமுகப்படுத்தி விட்டனர்.
- இந்தி மொழி மீது மத சாயமோ, அரசியல் சாயமோ பூசுவது உகந்தது அல்ல.
திருப்பூர் :
இந்து முன்னேற்ற கழக மாநில தலைவர் கே.கோபிநாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் இந்தி மொழியை அறிமுகப்படுத்துவதை இந்து முன்னேற்ற கழகம் வரவேற்கிறது. நீண்ட நாட்களுக்கு முன்பே அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடகாவில் இந்தியை அறிமுகப்படுத்தி விட்டனர். இந்தி மொழியை ஒரு மொழியாக அனைவரும் பார்க்க வேண்டும். அம்மொழி மீது மத சாயமோ, அரசியல் சாயமோ பூசுவது உகந்தது அல்ல. இந்தியை எதிர்க்கும் தலைவர்களின் மகன், மகள்களும் மற்றும் பேரக்குழந்தைகளும் இந்தி மொழியை கற்றுக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற வகையில் தமிழகம் மட்டுமல்லாது பரந்த நமது இந்தியாவில் பயணம் செய்வதற்கு மொழி ஒரு தடையாக இருக்கக்கூடாது. எனவே நம்முடைய எதிர்கால குழந்தைகளின் அறிவு மற்றும் அவர்களின் நலன் கருதி இந்தி மொழியை அரசியல் ஆக்காமல் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.