ஏப்ரல் 23-ந் தேதி ஜல்லிக்கட்டு - செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்
- ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- விவசாயத்தை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்ற செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்பட்டு அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் மாதம் 15-ந் தேதி திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது. விவசாயத்தை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஆட்சி நடக்கிறது. மக்கள் தி.மு.க. அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்.
திருப்பூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உரிய விதிமுறைகளின்படி கலெக்டர் அனுமதி அளித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் 23-ந் தேதியன்றுநிச்சயமாக ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமையாக இருப்பதால் அன்று ஜல்–லிக்–கட்டு நடக்–கும் வாய்ப்பு அதிகம். இவ்வாறு அவர் கூறினார்.