கருவலூர் மாரியம்மன் கோவிலில் திருப்பணிகள் தொடக்கம்
- கும்பாபிஷேகம் செய்வதற்காக துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது
- அபிஷேக ஆராதனை செய்து பூமி பூஜை மற்றும் கால் கோல் விழா நடந்தது.
அவினாசி :
கருவலூரில் மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் பராமரிப்புப்பணிகள் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி அன்னதான மண்டபம் வாகன மண்டபம், பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம், திருச்சுற்று மண்டபம், தரைத்தளங்களில் கல்தளம் அமைத்தல் உள்ளிட்ட மராமத்துப் பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்வதற்காக துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேரூர்ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார், குமரகுருபர சுவாமிகள் முன்னிலையில் மாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்து பூமி பூஜை மற்றும் கால் கோல் விழா நடந்தது. இதில் கருப்புசாமி கவுண்டர், கருவலூர் ஊராட்சி முன்னாள் தலைவர் அவினாசியப்பன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் வெ.லோகநாதன், அறங்காவலர்அர்ச்சுனன், கோவில் செயல் தலைவர் குழந்தைவேலு ஆகியோர் செய்திருந்தனர்.