மின்கம்பத்தை மாற்றும் பணிக்கு நிதி வழங்கிய பொதுமக்கள் - ம.தி.மு.க., கவுன்சிலர்
- மின் கம்பத்தை புதிய இடத்தில் வைப்பதற்கு அரசுக்கு ரூ .68 ஆயிரத்து 210 செலுத்த வேண்டுமென மின்சாரம் வாரியம் தெரிவித்தது.
- பொதுமக்களிடம் இருந்து 40 ஆயிரம் நிதி உதவி பெற்று உதவி மின் பொறியாளரிடம் வழங்கினார்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி 24 -வது வார்டு சாமுண்டிபுரம் சலவைக்காரர் 3 வது வீதியில் பல ஆண்டுகளாக போக்குவரத்துக்கு இடையூறாக 3 மின் கம்பம் இருந்தது. இதனை மாற்றுவதற்கு மின்சார வாரியத்திடம் கோரிக்கை வைத்தனர்.ஆனால் மின் கம்பத்தை மாற்றி புதிய இடத்தில் வைப்பதற்கு அரசுக்கு ரூ .68 ஆயிரத்து 210 செலுத்த வேண்டுமென மின்சாரம் வாரியம் தெரிவித்தது.
உடனடியாக ம.தி.மு.க. கவுன்சிலர் நாகராஜின் முயற்சியில்இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக அப்பகுதி பொதுமக்களிடம் கலந்து ஆலோசித்து அவர்கள் ஒத்துழைப்புடன் மின்சார வாரியத்துக்கு கட்ட வேண்டிய தொகை ரூ. 68,210யை பொதுமக்களிடம் இருந்து 40 ஆயிரம் நிதி உதவி பெற்று மீதமுள்ள ரூ.28 ஆயிரத்தை தனது சொந்த நிதியிலிருந்து கொடுத்து உதவி மின் பொறியாளரிடம் வழங்கினார். அப்போது மாமரத்து வீதியைச் சார்ந்த கோபி என்ற பழனி குமார் , உதவியாளர் சதாசிவம் ஆகியோர் உடனிருந்தனர்.