போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை
- வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
- ‘ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி' என்ற சாதனை மலரை அமைச்சர் வெளியிட்டார்.
திருப்பூர் :
திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் குண்டடம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார். கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசும்போது, 'பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வினியோகம், வடிகால் வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக்கொடுக்க வேண்டும்' என்றார்.
பின்னர் 'ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி' என்ற சாதனை மலரை அமைச்சர் வெளியிட்டார். முன்னதாக திருப்பூர் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் ஒழிப்பு தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டங்களில் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், உதவி கலெக்டர் (பயிற்சி) பல்லவி வர்மா, மாநகர போலீஸ் துணை கமிஷனர் அபிஷேக் குப்தா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லட்சுமணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வாணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.