உள்ளூர் செய்திகள்

ரோட்டின் நடுவில் பதிக்கப்படும் எரிவாயு குழாயை படத்தில் காணலாம்.

பல்லடத்தில் சாலையை தோண்டி எரிவாயு குழாய் பதிப்பால் வாகன ஓட்டிகள் அவதி

Published On 2023-04-01 05:06 GMT   |   Update On 2023-04-01 05:06 GMT
  • சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.
  • ஒளிரும் ஒளிபட்டைகளை வைக்க வேண்டும்.

பல்லடம் :

பல்லடம் திருப்பூர் மெயின் ரோட்டில் தனியார் நிறுவனம் சார்பில் எரிவாயு குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், எரிவாயு குழாய் அமைக்கும் பணிகளை ரோட்டின் ஓரத்தில் அமைக்காமல், ரோட்டின் நடுவில் தோண்டி பதிப்பதால், அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கடும் அவதி ஏற்பட்டது. இதற்கிடையே, சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் தலைவர் அண்ணாதுரை பல்லடம் நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.அதைத்தொடர்ந்து கோட்டப் பொறியாளர் தனலட்சுமி, உதவி பொறியாளர் பாபு உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் ரோடு ஓரமாக குழாய் பதிக்க வேண்டும். வாகன ஒட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது.

எரிவாயு குழாய் அமைக்கும் பணி மேற்கொள்ளும்போது, இரவில் விபத்துக்கள் நிகழாமல் இருக்க ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் ஒளிரும் ஒளிபட்டைகளை வைக்க வேண்டும். குழாய் பதித்த பின்னர் குழிகளை நன்றாக மண் போட்டு மூட வேண்டும். ரோட்டில் மண் தேங்க கூடாது.இவ்வாறு அவர்கள் அறிவுறுத்தினர்.  

Tags:    

Similar News