தி.மு.க., ஆட்சி அமையும் போதெல்லாம் திருப்பூர் வறுமையால் பாதிக்கப்படுகிறது - பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பேச்சு
- தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கண்ணபிரான் தலைமை தாங்கினார்.
- தலைமை கழக பேச்சாளர் புரட்சித்தம்பி, அமைப்பு செயலாளர் புத்திசந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க தொழிற்சங்கம் சார்பில், மே தினவிழா பொதுக்கூட்டம், பெரிச்சிபாளையத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கண்ணபிரான் தலைமை தாங்கினார்.
முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன், பகுதி செயலாளர்கள் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, மகே ஷ்ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை கழக பேச்சாளர் புரட்சித்தம்பி, அமைப்பு செயலாளர் புத்திசந்திரன் உள்ளிட்டோர் பேசினர். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ பேசியதாவது:-
ஏற்றுமதி வர்த்தகத்தில், எண்ணற்ற பெருமைகளை பெற்ற திருப்பூர், கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்தியாவின் ஏழை நகரமாக மாறிவிட்டது. வீட்டு வாடகை கொடுக்க முடியாமல், தொழிலாளர்கள் வருத்தத்துடன் வாழ்ந்து வருகின்றனர் தி.மு.க., ஆட்சி அமையும் போதெல்லாம், திருப்பூர் வறுமையால் பாதிக்கப்படுகிறது. ஆட்சி வருவதற்கு முன்னதாகவே வறுமை வந்துவிடுகிறது. திமுக அரசு உயர்த்தி உள்ள வரி உயர்வால், பொதுமக்கள், தொழில் நடத்துவோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுத்திகரிப்பு தொழில்நு ட்பத்தை செயல்படுத்த, 200 கோடி ரூபாய் வட்டியில்லா கடனாக வழங்கி, திருப்பூருக்கு உயிர் கொடுத்தவர் அம்மா. அதன் மூலம் திருப்பூர் தொழில் வளம் பெற்று திருப்பூர் மக்கள் சந்தோஷமாக வாழ்ந்தனர். தற்போது, பஞ்சு நுால் விலை உயர்வால், தொழில் நடத்தியவர்கள் கடனாளியாக மறிவிட்டனர். நிலைமை சரியாக, மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைய வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். கூட்டத்தில் தென்னம்பாளையம் பகுதி செயலாளரும் மாமன்ற எதிர்கட்சி தலைவருமான அன்பகம் திருப்பதி, பகுதி செயலாளர்கள் கருணாகரன், கண்ணன், கேசவன், ஹரிஹரசுதன், திலகர் நகர் சுப்பு, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எஸ்.பி.என்..பழனிச்சாமி, மாவட்ட விவசாய அணி செயலாளர் கலைமகள் திரு.கோபால்சாமி,மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல், உள்பட பலர் கலந்து கொண்டனர்.