கருங்கல்லில் ஹெல்மெட் வடிவமைத்த அவினாசி சிற்பி
- அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படும் விதமாக கடந்த மூன்று மாதமாக கருங்கல்லில் ஹெல்மெட் வடிவமைத்தேன்.
- ஒரே கருங்கல்லை பயன்படுத்தி அதை நன்கு செதுக்கி 8 கிலோ எடை அளவில் நேர்த்தியான ஹெல்மெட் வடிவமைத்துள்ளார்.
அவினாசி
திருப்பூர் மாவட்டம் அவினாசி கால்நடை மருத்துவமனை எதிரில் சிற்ப கலைக்கூடம் நடத்தி வருபவர் சரவணன் (வயது 32). இவர் பல்வேறு சிற்பங்களை செதுக்கியுள்ளார். இந்த நிலையில் ஒரே கருங்கல்லை பயன்படுத்தி அதை நன்கு செதுக்கி 8 கிலோ எடை அளவில் நேர்த்தி யான ஹெல்மெட் வடிவமைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் செல்கின்றனர். ரூ.500 மதிப்புள்ள ஹெல்மெட் அணியாமல் செல்வதால் ரூ.1,000 அபராதம் கட்ட நேரிடுகிறது. மேலும் விபத்து ஏற்பட்டு விலைமதிப்பில்லாத உயிரை இழக்க நேரிடுகிறது. எனவே அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படும் விதமாக கடந்த மூன்று மாதமாக கருங்கல்லில் ஹெல்மெட் வடிவமைத்தேன். கொரோனா காலத்தில் கொரோனா உருவ பொம்மை, முக கவசம், சானி டைசர் பாட்டில் போன்றவற்றை கருங்கல்லால் செதுக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியிருந்தேன். அந்த வகையில் தற்போது ஹெல்மெட் அவசியத்தை வலியுறுத்துவதற்காக கருங்கல்லில் ஹெல்மெட் வடிவமைத்தேன் என்றார்.