தென்னை மரங்கள் செழிக்க வடகிழக்கு பருவ மழை கைக்கொடுக்குமா?
- தென்னை டானிக் நுண்ணூட்டம் செலுத்த வேண்டும் என வேளாண் விஞ்ஞானிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
- விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்றனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, தாராபுரம், அவிநாசி, பல்லடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.தென்னைக்கு தண்ணீர் அதிக அளவில் தேவை என்ற நிலையில் போதிய மழையில்லாததால் பல இடங்களில் தென்னை மரங்கள் கருகின. வெள்ளைப்பூச்சி தாக்குதலால் தென்னை இலைகள் பழுப்பு நிறத்திற்கு மாறின.வெள்ளைப்பூச்சி தாக்குதல் உள்ள தென்னை மரங்களில், தண்ணீரை பீய்ச்சி அடிக்க வேண்டும். தென்னை டானிக் நுண்ணூட்டம் செலுத்த வேண்டும் என வேளாண் விஞ்ஞானிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வட கிழக்குப்பருவ மழை கைகொடுக்குமா என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். சேதத்திற்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.வேளாண்துறையினர் கூறுகையில், கடந்த 10 மாதமாக போதிய மழை பெய்யவில்லை. குறைந்தளவு மழை தான் பெய்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் குறைந்திருந்தது. விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்றனர்.