உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

காரி பருவ பயிர் சாகுபடி - வேளாண் நிலங்களில் கள ஆய்வு

Published On 2022-07-20 08:05 GMT   |   Update On 2022-07-20 08:05 GMT
  • வேளாண் துறையினர் விளக்கம் மற்றும் ஆய்வு நடத்துகின்றனர்.
  • கூடுதல் மகசூல் பெறுதல், மானியம் பெறுதல் உள்ளிட்டவை குறித்து விளக்கினர்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் காரிப் பருவ பயிராக நிலக்கடலை ஏறத்தாழ 6 ஆயிரம் ஹெக்டர், சோளப் பயிர் 5 ஆயிரம் எக்டர் என்ற அளவில் பயிரிடப்படுகிறது.திருப்பூர் மற்றும் ஊத்துக்குளி சுற்றுப்பகுதியில் மானாவாரி விவசாயிகள் இப்பயிர்களை பெருமளவு விதைக்கின்றனர். இதில் விளை நிலங்களின் பரப்பை அதிகரித்தல் மற்றும் கூடுதல் மகசூல் பெறும் முறை குறித்து வேளாண் துறையினர் விளக்கம் மற்றும் ஆய்வு நடத்துகின்றனர்.

இதில் புது ரகங்களை விதைப்பண்ணை அமைத்து சான்று விதை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தேசிய உணவு பாதுகாப்பு திட்ட மாவட்ட ஆலோசகர் அரசப்பன் மற்றும் அலுவலர்கள் கள ஆய்வு செய்தனர்.அவ்வகையில் நெருப்பெரிச்சல் பகுதியில் நிலக்கடலை தரணி ஆதார நிலை விதைப் பண்ணை, செட்டிபாளையத்தில் சோளம் பயிருக்கான விதைப் பண்ணை ஆகியன அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஆய்வு செய்த அலுவலர்கள், கூடுதல் மகசூல் பெறுதல், மானியம் பெறுதல் உள்ளிட்டவை குறித்து விளக்கினர்.

Tags:    

Similar News