குண்டடம் பகுதியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா
- எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் நடராஜன் உள்பட குண்டடம் பேரூர் அ.தி.மு.க. அனைத்து பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததையடுத்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
காங்கயம்:
குண்டடம் ருத்ராவதி பேரூராட்சி பகுதியில் குண்டடம் பேரூர் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. குண்டடம் பேரூர் செயலாளரும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவரும், கவுன்சிலருமான ஏ.பி.கே. தமிழரசு தலைமை தாங்கி ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் ருத்ராவதி பேரூராட்சி கவுன்சிலர்களான சுமதி பழனிசாமி, குமார், ஜெயலலிதா பேரவை தியாகராஜன், பி.ஏ.பி.,முத்துசாமி, ெபாருளாளர் முத்துசாமி, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் நடராஜன் உள்பட குண்டடம் பேரூர் அ.தி.மு.க. அனைத்து பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததையடுத்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.