பல்லடம் அரசு கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மன்றம் தொடக்க விழா
- அறக்கட்டளை தலைவர் செந்தில்குமார், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பர்வீன் பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
- பாலசுப்பிரமணியம், மற்றும் பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பல்லடம்:
பல்லடம் அரசு கலைக் கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மன்றம் துவக்க விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனியன் தலைமை தாங்கினார். பல்லடம் தமிழ் சங்கத்தலைவர் ராம். கண்ணையன், அறம் அறக்கட்டளை தலைவர் செந்தில்குமார், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பர்வீன் பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி துணை முதல்வர் ஜெயச்சந்திரன் வரவேற்றார். போதை ஒழிப்பு மன்றத்தை துவக்கி வைத்து பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் பேசுகையில்:-
தமிழ்நாட்டில் போதைப்பொருள் தடுப்பு குறித்து அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.வரும் காலத்தில் போதைப் பொருள் இல்லா தமிழகமாக மாற்ற தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க இன்றைய மாணவர்கள் எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும். இந்த போதைப்பொருள் தடுப்பு குறித்து காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனை அனைவரும் கடைப்பிடித்து போதைப் பொருள் இல்லா தமிழகமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் அண்ணா துரை, பாலசுப்பிரமணியம், தமிழ்ச்சங்க செயலாளர் கருப்புசாமி, மற்றும் சுரேஷ், கல்லூரி பேராசிரியர் பாலசுப்பிரமணியம், மற்றும் பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.