திருப்பூர் மாவட்டத்தில் 1,192 மருத்துவமனைகளின் உரிமம் புதுப்பிப்பு
- பதிவு உரிமம் பெறாமல் செயல்படும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
- மருத்துவ கல்வி இயக்ககத்தின் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால், உரிமம் ரத்து செய்யப்படும்.
திருப்பூர்:
மருத்துவமனைகள், கிளினிக்குகள் தங்கள் உரிமத்தை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். அவ்வாறு உரிமம் புதுப்பிக்காத மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா தொற்று காலத்தில் புதிதாக மருத்துவமனைகள், கிளினிக்குகள் உருவாகின.மருத்துவ கல்வி இயக்ககம் 'ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் படுக்கை வசதிக்கேற்ப ஆக்சிஜன் கட்டமைப்பு, தேவையான 'வென்டிலேட்டர்' வசதி ஏற்படுத்த வேண்டும். அவசர கால பயன்பாட்டுக்கு சாய்வுதளம் அல்லது லிப்ட்வசதி இருத்தல் வேண்டும். இத்தகைய வசதியுள்ள மருத்துவமனைக்கு மட்டும்பதிவு உரிமம் வழங்கப்படும்.
பதிவு உரிமம் பெறாமல் செயல்படும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்என அறிவித்தது.உரிமம் புதுப்பிக்க திருப்பூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 1,310 விண்ணப்பங்கள் மருத்துவத்துறைக்கு வந்துள்ளது. இவற்றில் 1,192 மருத்துவமனை, கிளினிக் உரிமம் புதுப்பித்து சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆய்வு நடத்தி, 118 மருத்துவமனை, கிளினிக் ஆகியவற்றின் நிலையை ஆராய வேண்டியுள்ளது. இவற்றில் மருத்துவ கல்வி இயக்ககத்தின் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால், உரிமம் ரத்து செய்யப்படும். தொடர்ந்து மருத்துவமனை செயல்பட அனுமதி மறுக்கப்பட உள்ளதாக மருத்துவ சுகாதார பணிகள் துறையினர் தெரிவித்தனர்.