உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

உடுமலையில் ஏ.டி.எம். மையத்தை சேதப்படுத்திய கும்பல்

Published On 2023-04-22 06:11 GMT   |   Update On 2023-04-22 06:13 GMT
  • பள்ளி மாணவ மாணவிகள், பெண்கள், பொதுமக்கள் வந்து செல்ல முடியாத அளவிற்கு போதை ஆசாமிகள் அட்டகாசம் உள்ளது.
  • மர்ம நபர்கள் கல் மற்றும் காலி மது பாட்டில்களை கொண்டு எறிந்து உடைத்திருப்பது தெரிந்தது.

உடுமலை:

கோவை மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கியின் உடுமலை கிளை பசுபதி வீதியில் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி கிளையில் கணக்கு வைத்துள்ளவர்கள் நகை கடன் ,பயிர் கடன் பெறவும் பரிவர்த்தனை மேற்கொள்ளவும் ஏராளமான வாடிக்கையாளர் வந்து செல்கின்றனர்.

நேற்று முன் தினம் வங்கி அலுவலர்கள்வங்கியை பூட்டி சென்றனர். நேற்று காலை வங்கியைத் திறக்க வந்த போது வங்கி முன் உள்ள ஏடிஎம். மையத்தின் கண்ணாடி உடைந்து கிடந்தது. மர்ம நபர்கள் கல் மற்றும் காலி மது பாட்டில்களை கொண்டு எறிந்து உடைத்திருப்பது தெரிந்தது. இது குறித்து வங்கி அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

வங்கிக்கு எதிரில் வணிக வளாகங்கள், பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பிரதான ரோடான பசுபதி வீதியில் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு இரவிலும் மது விற்பனை முறைகேடாக நடந்து வருவதால் போதை ஆசாமிகளின் புகலிடமாக மாறி உள்ளது. பள்ளி மாணவ மாணவிகள், பெண்கள், பொதுமக்கள் வந்து செல்ல முடியாத அளவிற்கு போதை ஆசாமிகள் அட்டகாசம் உள்ளது.

எனவே இந்த கடையை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது ஏடிஎம். மையத்தை உடைத்து திருட முயற்சி நடந்துள்ளதால் பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் மது கடையை உடனடியாக மாற்று அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News