உள்ளூர் செய்திகள்
பல்லடம் அருகே சாலையில் வீசப்படும் கோழிக்கழிவுகளால் சுகாதார சீர்கேடு
- நோயால் இறந்து விடும் கோழிகளை நிலத்தில் குழி தோண்டி முறையாக அப்புறப்படுத்துவது வழக்கம்.
- தினந்தோறும் சுமார் 10 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மற்றும் கேரளா, ஆந்திரா, உட்பட வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.
பல்லடம்:
பல்லடம் பகுதியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இதில் தினந்தோறும் சுமார் 10 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மற்றும் கேரளா, ஆந்திரா, உட்பட வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்தநிலையில் நோயால் இறந்து விடும் கோழிகளை நிலத்தில் குழி தோண்டி முறையாக அப்புறப்படுத்துவது வழக்கம். ஆனால் சில பண்ணையாளர்கள் முறையாக அப்புறப்படுத்தாமல் சாக்குகளில் கட்டி பல்லடம் பகுதியில் உள்ள வாய்க்கால்கள், ரோட்டோரங்களில், வீசி சென்று விடுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே இறந்த கோழிகளை முறையாக அப்புறப்படுத்தாமல் ரோட்டோரங்களில் வீசிச் செல்லும் நபர்களை கண்காணித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.