பல்லடம் அருகே பஞ்சுமில்லில் திடீர் தீ விபத்து
- நேற்று மதியம் 2 மணி அளவில் திடீரென அந்த மில்லினுள் இருந்து கரும் புகை வெளியேறியதாக கூறப்படுகிறது.
- இந்த திடீர் தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள், இயந்திரங்கள், முற்றிலும் சேதமடைந்துள்ளன.
பல்லடம்:
பல்லடம் அருகே கரடிவாவி முத்தாண்டிபாளையத்தில் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமாக பஞ்சு மில் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் வழக்கம் போல வேலைக்கு வந்த பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் திடீரென அந்த மில்லினுள் இருந்து கரும் புகை வெளியேறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் வெளியில் தப்பி வந்துள்ளனர்.மேலும் காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென மில் முழுவதும் பரவியுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் சம்பவ இடம் விரைந்து வந்த பல்லடம் தீயணைப்புதுறையினர் மூன்று தனியார் தண்ணீர் லாரிகள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த திடீர் தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள், இயந்திரங்கள், முற்றிலும் சேதமடைந்துள்ளன.